பிரித்தானியா துப்பாக்கி சூடு: பொலிசின் உயிரை காப்பாற்றிய எம்பி- நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானியாவில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தால் அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், எம்பி ஒருவர் செய்த நெகிழ்ச்சி செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

பாராளுமன்ற வளாகத்தில் 40 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியாகியுள்ளனர், மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபரும் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவத்தால், Keith Palmer (48) என்ற பொலிஸ் பலத்த காயடைந்து நிலைகுலைந்து விழுந்துள்ளார்.

மேலும், இவரது உடலில் இருந்து அதிகமான ரத்தம் வெளியேறி வண்ணம் இருந்துள்ளது.

இதனைப்பார்த்த கொன்சர்வேட்டிவ் கட்சயை சேர்ந்த எம்பி Tobias Ellwood, நிலைகுலைந்து கிடந்த பொலிசின் வாயோடு வாய் வைத்து செயற்கை சுவாசம் அளித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து, விரைந்து வந்த அவரச ஊர்தியில் அந்த பொலிஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எம்பியின் இந்த செயலை பலரும் பாராட்டியுள்ளனர், மேலும் பொலிஸின் உயிரை காப்பாற்றியதற்காக அவரது குடும்பம் எம்பிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து எம்பி கூறியதாவது, இது ஒரு பெரிய துன்பமான சம்பவம் ஆகும். இந்த சம்பவத்தால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments