டயானாவின் தனிப்பட்ட வீடியோ: அரச குடும்பத்தினர் அதிருப்தி

Report Print Santhan in பிரித்தானியா
1327Shares
1327Shares
ibctamil.com

பிரித்தானியாவின் மறைந்த இளவரசி டயானாவின் தனிப்பட்ட வீடியோ பதிவுகள் வெளியானதால் அரசகுடும்பத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இளவரசி டயானா இறந்து 20 வருடங்கள் ஆகவுள்ள நிலையில் அவர் தொடர்பான விவாதங்கள் தற்போது வரை நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன.

அண்மையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான் சேனல்4 இளவரசி டயானா பற்றிய ஆவணப் படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் டயானா பற்றிய தனிப்பட்ட வீடியோக்கள் இருந்துள்ளன. குறிப்பாக டயானா இளவரசர் சார்லஸ் உடனான குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இல்லை என ஆவணப்படத்தில் கூறப்பட்டிருந்தது.

மேலும் டயானா தனது கணவர் சார்லசுடன் விவாதித்த வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளது, இதனால் அரசகுடும்பத்தினர் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்