பிரித்தானிய இளவரசர் முகம் போன்று இருக்கும் இளம்பெண்ணின் முழங்கால்: புகைப்படத்தை வெளியிட்ட தாய்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
404Shares
404Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவரின் முழங்கால் பார்ப்பதற்கு குட்டி இளவரசர் ஜார்ஜ் போன்று இருப்பதால் அதுதொடர்பான புகைப்படங்களை அப்பெண்ணின் தாயார் மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டுள்ளார்.

பெர்மிங்கஹாமை சேர்ந்த Rachel Petricca(47) என்பவரது மகள் Minnie (17). இவர் தனது இரண்டு வயதில் இருந்தே நடனம் கற்றுவருவதால் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் Britain's Got Talent நிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கிறார்.

இந்நிலையில், இதற்காக போட்டோஷீட்டில் கலந்துகொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இவரது முழங்காலின் முட்டி பகுதியானது பார்ப்பதற்கு பிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜார்ஜ் போன்று இருந்துள்ளது.

இதனைப்பார்த்த இவரது தாயார் Rachel அந்த புகைப்படத்தை தனது நண்பர்களுக்கு அனுப்பி, அனைவரையும் பார்க்க சொல்லியுள்ளார்.

மேலும் Rachel கூறியதாவது, எனது மகளுக்கு பிரித்தானிய இளவரசர் ஹரியை மிகவும் பிடிக்கும், அவரைத்தான் தனது ரோல் மொடலாக கொண்டுள்ளான் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து Minnie கூறியதாவது, எனது தாய் சொல்வதுபோது கால்களின் முழங்கால் பகுதி பார்ப்பதற்கு இளவரசர் போல் இருக்கலாம், இருப்பினும் நான் நடனம் ஆடுபவர் என்பதால் எனது கால்கள் மற்றவர்களின் கால்களை விட சற்று வித்தியாசமானதாக இருக்கும்.

மேலும், இளவரசர் ஹரி கம்பீரமானவர், இதனால் அவரை பிடிக்கும் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்