இங்கிலாந்தில் கத்திக்குத்தில் இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு காயம்

Report Print Thayalan Thayalan in பிரித்தானியா
இங்கிலாந்தில் கத்திக்குத்தில் இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு காயம்
108Shares
108Shares
ibctamil.com

வடகிழக்கு இங்கிலாந்தின் Chelmsford பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில், பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர், படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், பொலிஸார் மீது கத்திக் குத்தை மேற்கொண்டதாகக் கூறப்படும் 50 வயதுடைய பெண்ணொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மேற்படி பகுதியில் நேற்றுமுன்தினம் வீதியில் கத்தியுடன் நடமாடிய மேற்படி பெண்ணை, பொலிஸார் நெருங்க முற்பட்ட வேளையிலேயே, கத்திக்குத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

ஒரு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காலிலும் மற்றைய பொலிஸ் உத்தியோகத்தருக்கு கையிலும் காயமேற்பட்டுள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தையடுத்து, கொலை செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் மேற்படி பெண்ணைக் கைதுசெய்துள்ளதாக, பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்