பாரம்பரிய வழக்கத்தை மீறப்போகும் பிரித்தானிய வருங்கால இளவரசி மெர்க்கல்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவின் வருங்கால இளவரசி மேகன் மெர்க்கல் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விருந்தினர்கள் முன்னால் உரையாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய இளவரசர் ஹரி- மேகன் மெர்க்கல் திருமணம் வரும் மே மாதம் 19-ஆம் திகதி நடைபெறவுள்ளது.

பொதுவாக இது போன்ற திருமண நிகழ்வில் மணமகன், மணமகளின் தந்தை தான் விருந்தினர்கள் முன்னால் உரையாற்றுவார்கள்.

ஆனால் இந்த பாரம்பரியத்தை உடைத்து மணமகளான மெர்க்கல் தனது வருங்கால கணவர் ஹரியை அன்பாக பாராட்டி பேசவுள்ளார்.

இதோடு மகாராணி எலிசபெத்துக்கும், தனக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கும் மெர்க்கல் தனது உரையின் போது நன்றி தெரிவிக்கவுள்ளார் என தகவல்கள் கூறுகின்றன.

ஹரி- மெர்க்கல் திருமண நிகழ்வில் 800 விருந்தினர்கள் வரை கலந்து கொள்ளவுள்ளார்கள்.

மெர்க்கலுக்கு பொதுவெளியில் பேசுவது இது ஒன்றும் புதிய விடயமல்ல. ஏற்கனவே கடந்த 2015-ஆம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினத்தன்று அவர் ஐக்கிய நாடுகள் சபைக்காக உரையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்