லண்டனில் தமிழருக்கு கிடைத்த கெளரவம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் அமைதிக்கான தூதுவர் விருதை தமிழர் ஒருவருக்கு வழங்கி அரசு சாரா அமைப்பு கெளரவித்துள்ளது.

அப்துல் பாசித் என்ற தமிழர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியாவில் குடியேறியுள்ளார்.

தற்போது குடியுரிமை பெற்றிருக்கும் அப்துல் முக்கிய பணிகள் பலவற்றில் ஈடுபட்டு வருகிறார்.

முக்கியமாக அமைதி சார்ந்த பணிகளில் இவர் ஈடுபட்டு வருகிறார்.

இலங்கையில் போர் நடந்த சமயத்திலும், அதற்கு பின்பாகவும் அப்துல் பல்வேறு அமைதி நடவடிக்கைகளில் கலந்து கொண்டுள்ளார்.

அதேபோல மியான்மர் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் பிரச்சனைக்காக களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகிறார்.

அப்துலின் செயலை பாராட்டும் வகையில் லண்டனில் இருக்கும் சர்வதேச அமைதிக்கான கூட்டமைப்பு அவருக்கு அமைதிக்கான தூதுவர் விருதை வழங்கி கெளரவித்துள்ளது.

உலகின் முக்கிய நபர்கள் மட்டுமே இவ்விருதை பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்