பிரித்தானிய இளவரசர் ஹரியின் தந்தை யார்?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

முன்னாள் இளவரசி டயானாவின் Butler-ன பால், பிரித்தானிய இளவரசர் ஹரியின் தந்தை குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

1987 முதல் 1997 வரை முன்னாள் இளவரசி டயானாவின் Butler-ஆக இருந்தவர் பால்(வயது 59).

அவுஸ்திரேலியாவின் I'm A Celebrity... Get Me Out Of Here! என்னும் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட பாலிடம் பேட்டி எடுத்தவர், இளவரசர் ஹரி, இளவரசர் சார்லஸின் மகன் என்பதை நம்புகிறீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

ஒரு வினாடி கூட தாமதிக்காத பால் தயக்கமின்றி ”நிச்சயமாக” என்றார்.

உடனடியாக பேட்டி எடுப்பவர், ”அப்படியானால் அந்த ஆரஞ்சு முடி கொண்டவர்... இல்லையா” என்று பொடி வைத்துப்பேச, பால் ”இளவரசர் ஹரி பிறந்த நேரத்தில் டயானாவுக்கு ஜேம்ஸ் ஹெவிட்டைத் தெரியவே தெரியாது, இது உண்மை” என்று தெரிவித்தார்.

மேலும், ”ஐந்து வருட திருமண வாழ்க்கையில் அவருக்கு ஹரி பிறந்தார், அந்த நேரத்தில் டயானா, ஜேம்ஸ் ஹெவிட்டை சந்தித்ததே இல்லை என, பால் விளக்க, பேட்டி எடுப்பவர் “நான் உங்களை நம்புகிறேன்” என்று கூற நிகழ்ச்சித் தொகுப்பாளர் ”நல்லது அந்தப் பிரச்சினை முடிந்தது” என்றார்.

இதே கேள்வி ஜேம்ஸ் ஹெவிட்டிடமே ஒரு முறை கேட்கப்பட்டது, நீங்கள் இளவரசர் ஹரியின் தந்தையா என்று கேட்டதும் உடனடியாக அவர் “இல்லை, நான் இல்லை” என்றார்.

தற்போது தனியாக வசிக்கும் ஜேம்ஸ் ஹெவிட் 1986 ஆம் ஆண்டு டயானாவின் குதிரையேற்ற பயிற்சியாளராக இருந்தபோது இருவருக்கும் நட்பு ஏற்பட்டது.

டயானாவின் கணவரான இளவரசர் சார்லஸ் அவரது முன்னாள் காதலியான கமீலா பார்க்கருடன் தொடர்பிலிருப்பதாக வதந்திகள் வரத் தொடங்கிய அதே நேரத்தில்தான் டயானாவுக்கும் ஜேம்ஸ் ஹெவிட்டுக்கும் இடையே ரகசிய உறவு மலர்ந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்