லண்டனில் வன்முறை அதிகரிப்பு - ஆறு பேர் உயிரிழப்பு

Report Print Thayalan Thayalan in பிரித்தானியா

லண்டனில் அண்மைய தினங்களாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், கூடுதலாக 300 பெருநகர பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஏழு நாட்களில் லண்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு மற்றும் கத்திக்குத்து தாக்குதல்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவத்தை அடுத்தே இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து பெருநகர பொலிஸ் தலைமை அதிகாரி தெரிவிக்கையில், மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள இவ்வாறான சம்பவங்களை தொடர்ந்து தினமும் 300 அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை, இவ்வாறான வன்முறை குற்றங்களை தடுக்கும் வகையில் 120 அதிகாரிகளை கொண்ட புதிய வன்முறைகளுக்கு எதிரான குழுவொன்றும் அமைக்கப்படவுள்ளது.

நவீன வரலாற்றில் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நியூயோர்க்கைவிட லண்டனில் கொலை வீதம் முதல்முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்