பிரித்தானிய இளவரசரின் திருமணத்தை இனிப்பு கொடுத்து கொண்டாடும் டப்பாவாலாக்கள்

Report Print Kabilan in பிரித்தானியா
167Shares
167Shares
ibctamil.com

பிரித்தானிய இளவரசர் ஹாரியின் திருமணத்தை, இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை டப்பாவாலாக்கள் இனிப்பு கொடுத்து கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

பிரித்தானிய இளவரசர் ஹரி- மேகன் மெர்க்கலின் திருமணம், இம்மாதம் 19ஆம் திகதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், இவர்களது திருமணத்தை இனிப்பு கொடுத்து கொண்டாட, மகாராஷ்டிராவில் உள்ள டப்பாவாலாக்கள் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக, மும்பை டப்பாவாலாக்கள் அசோசியேஷனின் செய்தி தொடர்பாளர் சுபாஷ் தலேகர் கூறுகையில்,

‘கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த பிரித்தானிய இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு எங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பினர். அங்கு சென்ற எங்களுக்கு பிரித்தானிய ராஜ குடும்பத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அந்த வரவேற்பை கவுரவிக்கும் வகையில் இளவரசர் ஹரியின் திருமணத்தன்று மும்பையில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளான டாடா மெமோரியல் மருத்துவமனை, கே.இ.எம். மருத்துவமனை மற்றும் வாடியா மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு இனிப்பு கொடுத்து கொண்டாட முடிவு செய்துள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.

PTI

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்