பிரித்தானியா இளவரசர் திருமணத்தில் செல்போன் தடை! விதிக்கப்பட்டுள்ள கெடுபிடி விதிமுறைகள்

Report Print Santhan in பிரித்தானியா
263Shares
263Shares
lankasrimarket.com

பிரித்தானியா இளவரசர் ஹரி-மெர்க்கல் திருமணம் வரும் சனிக்கிழமை Windsor Castle உள்ள St George's Chapel-ல் நடைபெறவுள்ளது.

இவர்களின் திருமணத்திற்கு சுமார் 1,00,000 மேற்பட்டோர் பங்கு கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இவர்கள் திருமணத்திற்கு அழைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சில விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதை பிரபல ஆங்கிலநாளிதழ் வெளியிட்டுள்ளது.

  • இவர்கள் திருமணத்திற்கு செல்பவர்கள் கால் விரல்கள் தெரியும் படி உள்ள ஷுக்களை அணிந்து செல்லக் கூடாது.
  • திருமணத்தின் போது மகாராணி தேவாலயத்தில் இருந்து வெளியேறும் வரை யாரும் அங்கிருந்து வெளியில் செல்லக்கூடாது.
  • திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் திருமணத்தைப் பற்றி பத்திரிக்கைகளில் சொல்லக் கூடாது.
  • செல்போன்கள் மற்றும் செல்பி போன்றவைகள் எடுப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
  • ஹை கீல்ஸ் கொண்ட செருப்புகளை அணிந்து செல்லக் கூடாது.
  • திருமணத்தின் போது தேவாலயத்தில் உள்ளே இருப்பவர்கள் அனைவரும் தொப்பி போட்டிருக்க வேண்டும்.
  • கை மற்றும் கால்கள் மூடிய நிலையில் இருக்கும் உடைகளை கட்டாயம் அணிந்து வர வேண்டும்.
  • திருமணத்திற்கு வருபவர்கள் கண்டிப்பாக மது அருந்தி வரக் கூடாது.
  • திருமணத்திற்கு பரிசு பொருட்கள் வேண்டாம் என்று புதுமண தம்பதிகளான ஹரி-மெர்க்கல் கூறியுள்ளனர். அப்படி பரிசு பொருட்கள் கொடுக்க விரும்புவோர் அதை பணமாக டிரஸ்ட்டுக்கு கொடுத்துவிடும் படி கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்