இந்திய பொலிசாரால் கொடூர சித்திரவதைக்கு உள்ளான பிரித்தானியர்: காப்பாற்ற கோரும் உறவினர்கள்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
151Shares
151Shares
lankasrimarket.com

இந்தியாவில் திருமணம் செய்து கொள்ள சென்ற பிரித்தானிய இளைஞரை பொலிசார் கைது செய்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாக அவரது உறவினர்கள் பகீர் தகவலை வெளியிட்டுள்ளனர்.

இந்திய வம்சாவளி பிரித்தானிய இளைஞர் Jagtar Singh Johal(31) என்பவருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய மாநிலம் பஞ்சாபில் வைத்து திருமணம் நடந்துள்ளது.

திருமணம் முடிந்து ஒரு வாரம் கடந்த நிலையில் தமது மனைவியுடன் ஷொப்பிங் செய்து கொண்டிருந்த ஜக்தர் சிங்-ஐ திடீரென்று சுற்றிவளைத்த பொலிசார், அவரது முகத்தை ஒரு பையால் மூடிவிட்டு, ஒரு வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து மாயமாகியுள்ளனர்.

இதுவரை ஜக்தர் சிங் மீது பொலிசார் எந்தவித வழக்கும் பதிவு செய்யவில்லை என கூறும் பிரித்தானியாவில் உள்ள சீக்கியர்கள் அமைப்பு

ஜக்தர் சிங் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று தங்களுக்கு கிடைத்துள்ளது எனவும், அதில் அவர் இதுவரை பட்ட சித்திரவதைகளை விரிவாக பதிவு செய்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள புறநகர் பகுதியில் ஜக்தர் சிங் சிறை வைக்கப்பட்டிருக்கலாம் என கூறும் சீக்கியர்கள் அமைப்பு

பஞ்சாபில் உள்ள இந்து மத தலைவரை கொலை செய்த வழக்கில் ஜக்தர் சிங்-ஐ பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஜக்தர் சிங் அப்பாவி எனவும், எந்த பயங்கரவாத அமைப்புடனும் தொடர்பு வைத்துக் கொள்ளும் இளைஞர் அல்ல ஜக்தர் சிங் எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப் பொலிசார் தம்மை கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும், உடலை எரித்து விடுவோம் என அச்சுறுத்துவதாகவும் அவர் தகவல் அனுப்பியுள்ளார்.

மட்டுமின்றி நாள்தோறும் கொடூர சித்திரவதைக்கு தாம் உள்ளாகி வருவதாகவும், பிறப்புறுப்பில் வரை மின்சாரம் பாச்சும் அளவுக்கு கடும் சித்திரவதைகளை அனுபவிப்பதாகவும் அவர் சீக்கிய அமைப்புக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜக்தர் சிங் சீக்கிய அமைப்புக்கு எழுதிய ரகசிய கடிதத்தை முதன் முறையாக அவரது குடும்பத்தினர் பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர்.

நாள்தோறும் பலமுறை விசாரணைக்கு உட்படுத்துவதாகவும், கொடூர சித்திரவதைகளால் தம்மால் தற்போது எழுந்து நடக்கவே முடியவில்லை எனவும்,

ஒப்புதல் வாக்குமூலம் தரவேண்டும் என தினசரி மிரட்டுவதாகவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்திய அரசுக்கு இந்த விவகாரம் தொடர்பில் கோரிக்கை வைத்துள்ளதாகவும், ஆனால் இதுவரை உரிய பதிலேது கிடைக்கப்பெறவில்லை எனவும் உறவினர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்