லண்டனில் இளைஞரை சுத்தியலால் அடித்தே கொலை செய்த கும்பல்: அதிர்ச்சி காரணம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
771Shares
771Shares
lankasrimarket.com

மேற்கு லண்டனில் நண்பனின் மனைவியுடன் படுக்கையை பகிர்ந்த இளைஞரை கும்பல் ஒன்று வாள் மற்றும் சுத்தியலால் கொடூரமாக கொன்றுள்ள சம்பவத்தில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேற்கு லண்டனில் உள்ள சவுதால் பகுதியில் குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

4 பேர் கொண்ட முகமூடி கும்பல் ஒன்று நள்ளிரவில் Gurinder Singh(28) இளைஞரை வழிமறித்து கொடூரமாக தாக்கியுள்ளது.

அவரது விரல்களை வெட்டி வீசிய அந்த கும்பல், சுத்தியலால் சரமாரியாக தாக்கியுள்ளது. அந்த கும்பலில் ஒருவர் வாளால் கொடூரமாக தாக்கியுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த இச்சம்பவத்தின்போது அவர் உதவி கேட்டு கூச்சலிட்டுள்ளார். ஆனால் அந்த வழியாக சென்ற எவரும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

உடல் மற்றும் தலையில் மொத்தம் 48 காயங்களுடனும் அவரது கை விரல்களில் சில துண்டிக்கப்பட்ட நிலையில் அடுத்த நாள் காலையில் குரேந்தர் சிங்கின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் Amandeep Sandhu(30) மற்றும் Ravinder Singh-Shergil(31) ஆகிய இருவரையும் கொலை குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Vishal Soba மற்றும் Kuldeep Dhillon ஆகிய இருவரையும் கொலைக்கு உடந்தை என கூறி தீர்ப்பு வழங்கியுள்ளது.

குல்திப் தில்லன் மற்றும் குரேந்தர் சிங் ஆகிய இருவரும் ஒரே குடியிருப்பில் ஒன்றாக குடியிருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் தில்லனின் மனைவியுடன் குரேந்தர் சிங் படுக்கையை பல நாள் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த தில்லன் தமது நண்பர்களுடன் இணைந்து குரேந்தரை படுகொலை செய்துள்ளதார்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்