லண்டனில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பயங்கரம்! 100 பேர் மோதிக்கொண்டதில் இளைஞருக்கு சரமாரி கத்தி குத்து

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது இளைஞர்கள் மோதிக் கொண்டதில் 15 வயது மதிக்கத்தக்க நபர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் சில மாதங்களாக கத்தி குத்து சம்பவம் என்பது சர்வசாதரணமாகிவிட்டது.

தற்போது வரை கத்தி குத்து மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தால் 70-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் லண்டனின் Romford பகுதியில் உள்ள community centre-ல் நேற்று இளைஞர் ஒருவர் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக சுமார் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூடியுள்ளனர்.

அப்போது திடீரென்று அங்கு மோதல் நிலவியதால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் 15 வயது மதிக்கத்தக்க நபரை அங்கிருந்த சிலர் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர்.

இதனால் ரத்தக் காயங்களுடன் அந்த நபர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகியுள்ளார்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 9.05 மணிக்கு இளைஞர்கள் பலர் மோதிக் கொள்வதாக தகவல் கிடைத்தது.

இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போது, 15 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்த போதும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார்.

மேலும் இது தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் 3 இளைஞர்களை கைது செய்துள்ளோம். அவர்களை தனியாக வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்