தமிழனை கௌரவித்த பிரித்தானிய மகாராணி

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

கொமன்வெல்த் நாடுகளில், சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பணியாற்றக்கூடிய இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் Queen's Young Leader Award வழங்கும் நிகழ்ச்சி பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெறும்.

2014 ஆம் ஆண்டில் இருந்து இந்த விருது வழங்கும் நிகழ்வு அரண்மனையில் நடைபெற்று வருகிறது. இந்த 2018 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் விழா நடைபெற்றபோது, இளவரசர் ஹரி வரவேற்பு உரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில், 240 இளம் தலைவர்களுக்கு பிரித்தானிய இளவரசி எலிசபெத் விருதுகளை வழங்கினார். இதில், மலேசியாவைச் சேர்ந்த தமிழரான சிவ நாகப்பன் விஸ்வேஸ்வரனும் விருது பெற்றார்.

காகிதங்களில் பயன்படுத்தாமல் உள்ள பக்கங்களை சேர்த்து, புத்தகமாக மாற்றி குழந்தைகளுக்கு வழங்கி சமூக முன்னேற்றத்திற்காக பணியாற்றியதன் மூலம் சிவ நாகப்பன் விஸ்வேஸ்வரனுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers