பற்றி எரியும் பிரித்தானியா: நிலைமையை மோசமாக்கும் 50,000 மின்னல்களும் கல்மழையும்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவின் வெப்பநிலை 99Fஐ எட்டியதைத் தொடர்ந்து பல இடங்கள் பற்றி எரிகின்றன.

நிலைமையை இன்னும் மோசமாக்கும் விதத்தில் இடியும் மின்னலும் சேர்ந்த புயலும் கல் மழையும் கூட மக்களின் அன்றாட வாழ்வை கலக்கத்துக்குரியதாக்கியுள்ளன.

மக்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளுகிறார்கள், பல அலுவலகங்கள் சீக்கிரமே மூடப்படுகின்றன.

மின்னல், திடீர் வெள்ளம் மற்றும் பெரிய பனிக்கட்டிகளைக் கொட்டும் கல்மழை ஆகியவை தாக்கும் என்பதால் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு இங்கிலாந்தில் வெப்பநிலை 90 F வாக்கிலேயே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Brightonஇல் ஒரு தண்ணீர் பைப் உடைந்ததால் சாலை எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, மக்களுக்கு குடிக்க சொட்டுத் தண்ணீர் இல்லை.

வடக்கு வேல்ஸ், Hampshire, Dorset மற்றும் Hertfordshire பகுதிகளில் பல இடங்கள் பற்றி எரிகின்றன.

ரயில் ஒன்று மின்னலால் தாக்கப்பட்டதையடுத்து ரயில் பயணமும் ஆபத்தை விளைவிக்கும் ஒன்றாக அச்சத்துடன் பார்க்கப்படுகிறது.

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு இன்றும், ஸ்காட்லாந்துக்கு நாளையும், தென்மேற்கு பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமைக்கும், மழை மற்றும் இடியுடன் கூடிய புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மணிக்கணக்காக ரயில்களுக்கு காத்திருக்கிறார்கள்.

வெப்பத்தைத் தணித்துக் கொள்வதற்காக ஆற்றில் குளிக்கச் சென்ற ஒரு நபர் தெரியாத இடத்தில் நீந்தப்போய் உயிரிழந்ததால் தெரியாத இடங்களில் நீந்த செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேலும் தீப்பற்றுவதைத் தவிர்ப்பதற்காக வெளியிடங்களில் சமையல் செய்வதையும் குப்பைகளை வீசுவதையும் தவிர்க்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்