1 மாதத்திற்கு முன் காணாமல் போன கணவன், மனைவிக்கு கொடுத்த பேரதிர்ச்சி

Report Print Vijay Amburore in பிரித்தானியா

ஸ்காட்லாந்தில் உறவினரை பார்க்க செல்வதாக கூறிவிட்டு சென்ற கணவன், திடீரென ஒரு பெண்ணை திருமணம் செய்து மனைவிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஸ்கட்லாந்தின் Motherwell பகுதியை சேர்ந்தவர் Malcolm McGregor (38). இவர் தனது மனைவி Cheryl Cowie-ஐ பள்ளி காலத்திலேயே காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து 34 மைல் தூரத்தில் உள்ள Kilmarnock நகரத்தில் தன்னுடைய உறவினர் ஒருவரை சந்தித்து விட்டு வருவதாக கூறிவிட்டு Malcolm வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார்.

கடந்த ஜூலை 20-ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறிய கணவர், நீண்ட நாட்களாகியும் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த Cheryl பொலிஸாரிடத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதனடிப்படையில் பொலிஸாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, Malcolm வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதை போன்ற புகைப்படங்கள் முகப்புத்தகத்தில் பரவியுள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த Cheryl புகைப்படம் குறித்து கேட்டறிகையில், Malcolm-ற்கு முகப்புத்தகத்தின் வாயிலாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவை சேர்ந்த Bell Valek (35) என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், வீட்டில் பொய் சொல்லிவிட்டு அவரை திருமணம் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இதுபற்றி Cheryl கூறுகையில், 27 வருடமாக சேர்ந்து வாழ்ந்து வந்த எங்களுடைய வாழ்க்கையில் இந்த சம்பவம் ஒரு பேரிழப்பு. அவருக்கு பைத்தியம் தான் பிடித்துவிட்டது. அவரது குடும்பத்தை அவரே சீரழித்துவிட்டார் என வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers