பிரித்தானிய தனியார் மருத்துவமனையில் துப்பாக்கிசூடு சத்தம்: பொலிசார் குவிப்பு

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவின் Huddersfield பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் துப்பாக்கிசூடு சத்தம் கேட்டதால் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் Huddersfield பகுதியில் செயல்பட்டு வரும் BMI ஹெல்த்கேர் மருத்துவமனையில் திடீரென ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையை சுற்றிலும் உள்ள சாலைகளை பொலிஸார் மூடியுள்ளனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களையும் வெளியேற்றி வருகின்றனர். இதனால் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் பொதுமக்கள் அனைவரும் பரபரப்பாக காணப்படுகின்றனர்.

மருத்துவமனை வளாகத்தில் துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதாகவும், படுகாயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் வளாகத்தில் ரத்தக்கறைகள் ஆங்காங்கே இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். நோயாளிகள் யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம், நாளை காலை 7 மணி வரை மூடப்பட்டிருக்கும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் முக்கியமான சம்பவம் ஏதோ நடைபெற்றுள்ளது. தற்போது அதற்கான தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்றைக்குள் சம்பவம் குறித்த தகவல்களை பொலிஸார் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers