லண்டனில் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து! விரைந்த 80 தீயணைப்பு வீரர்கள்

Report Print Kabilan in பிரித்தானியா

பிரித்தானியாவின் லண்டன் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள டஹென்ஹாம் நகரின் Hewett சாலையில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

12 தீயணைக்கும் எந்திரங்களுடன் 80 வீரர்கள் இந்த பணியில் இறங்கியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி எரிவாயு சிலிண்டர் ஒன்றை வெளியேற்றிய தீயணைப்பு வீரர்கள், அதனை குளிர்விக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சுற்றியுள்ள தீயணைப்பு நிலையங்களும் தயார் நிலையில் உள்ளன. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers