இளவரசர் சார்லஸ் பிறந்தநாளுக்காக மகாராணி வைத்துள்ள மிகப்பெரிய திட்டம்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் சார்லஸின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மகாராணி எலிசபெத் மிகப்பெரிய திட்டம் ஒன்றினை கைவசம் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய மகாராணி எலிசபெத் தன்னுடைய மகன், இளவரசர் சார்லஸின் 70-வது பிறந்தநாள் விழாவை மிகப்பெரிய அளவில் கொண்டாட திட்டமிட்டுள்ளாராம்.

இளவரசர் ஹரி- மெர்க்கல் திருமணத்திற்கு பின்னர் அரச குடும்பத்தில் நடைபெற உள்ள மிகப்பெரிய நிகழ்வு இதுவாகும்.

வருகின்ற நவம்பர் 14-ம் தேதியன்று வேல்ஸ் இளவரசர் சார்லஸின் பிறந்தநாள் விழா பக்கிங்ஹாம் அரண்மனையில் உள்ள மாநில மனைகளில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக தற்போதே ஏராளமான பத்திரிக்கைகள் அச்சடிக்கப்பட்டு, அரச குடும்பத்தை சேர்ந்த முக்கியமான நபர்கள் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம்.

வயது முதிர்ச்சியின் காரணமாகவே, நீண்ட நாட்களாக நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தவிர்த்து வந்த இளவரசர் பிலிப் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த நிகழ்வில் மகாராணி எலிசபெத் சிறப்புரை ஆற்றுவார் எனவும் கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers