தேனிலவுக்கு சென்ற இடத்தில் மனைவியை கொலை செய்த புதுமாப்பிள்ளை: திடுக்கிடும் பின்னணி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியை தேனிலவுக்கு சென்ற இடத்தில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லீவிஸ் பெணிட் என்பவர் கப்பல் மாலுமியாக இருந்த நிலையில், இசபெல்லா ஹெல்மேன் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

திருமணத்துக்கு முன்னரே இருவருக்கும் குழந்தை இருந்துள்ளது. இதையடுத்து புதுமண தம்பதி அமெரிக்காவுக்கு தேனிலவுக்கு சென்றுள்ளனர்.

அங்கு கப்பலில் சென்று கொண்டிருக்கும் போது இசபெல்லாவை லீவிஸ் கொலை செய்து தண்ணீரில் தூக்கி போட்டுள்ளார்.

இதையடுத்து பொலிசார் லீவிஸை கைது செய்தனர்.

விசாரணையில் லீவிஸ் விலைமதிப்புமிக்க நாணயங்களை கடத்தும் தொழிலை செய்து வந்தது தெரியவந்தது.

இதோடு தனது மனைவி இசபெல்லாவின் எஸ்டேட்டை அபகரிக்க திட்டமிட்ட லீவிஸ் அதற்காக அவரை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

திருமணத்துக்கு முன்னர் வரை லீவிஸின் கடத்தல் தொழில் இசபெல்லாவுக்கு தெரியாமல் இருந்த நிலையில் திருமணத்துக்கு பின்னர் தேனிலவின் போது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து இருவருக்கும் சண்டை ஏற்பட்ட நிலையிலேயே கொலை நடந்துள்ளது.

இசபெல்லாவின் சடலம் இன்னும் கண்டுப்பிடிக்கப்படாத நிலையில் கடத்தல் குற்றத்துக்காக ஏழு மாத சிறை தண்டனையை லீவிஸ் அனுபவித்து வருகிறார்.

மனைவியை கொன்ற வழக்கு நீதிமன்றத்தில் டிசம்பர் மாதம் விசாரணைக்கு வரவுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...