அம்மாவுக்கு முக்கியத்துவம்...சமையல் செய்து அசத்திய இளவரசி மெர்க்கல்: ரசித்து பார்த்த ஹரி

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி மெர்க்கல் முதல் முறையாக தனது தொண்டு நிறுவனம் சார்பாக சிறப்பு சமையல் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கெசிங்கடன் அரண்மனையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். குறிப்பாக மெர்க்கலின் தாய் டோரியா கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் இளவரசர் ஹரி கலந்துகொண்டு தனது மனைவிக்கு உறுதுணையாக இருந்துள்ளார். இந்த நிகழ்ச்சியை மிக சிறப்பாக தொகுத்து வழங்கிய மெர்க்கல், தேங்காய் கோழிக்கறி, அஸ்பர்கீன் மசாலா, மற்றும் சப்பாத்தி ஆகிய உணவுகளை தொண்டு நிறுவன பெண்களுடன் இணைந்து சமைத்து பரிமாறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மெர்க்கல், தற்போது லண்டனுக்கு குடிபெயர்ந்துள்ள நான் பன்முகத்தன்மை கொண்ட இடத்தில் வாழ்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

ஒரு சிறிய சமையல் அறையில் பல நாடுகளை உள்ளடக்கிய சமையல்களை செய்வது சிறப்பானது. தற்போது வெளியாகியுள்ள புத்தகத்தில் பல்வேறு சமையல் குறிப்புகள் அடங்கியுள்ளன என கூறியுள்ளார்.

தனது மனைவியின் இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை இளவரசர் ஹரி ரசித்து பார்த்துள்ளார். தனது தந்தை தாமஸ் மெர்க்கலை கண்டுகொள்வதில்லை என மெர்க்கல் மீது குறைகூறப்பட்டு வந்த நிலையில், தனது தாய்க்கு முக்கியத்துவம் கொடுப்பதில் மெர்க்கல் உறுதியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers