புயலில் சிக்கி காருடன் மூழ்கிய மூதாட்டி: ஹீரோவாக வந்து காப்பாற்றிய பிரித்தானியர்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் ப்ரோனாக் புயலில் சிக்கி மூழ்கிய காரில் இருந்து வழிபோக்கர் ஒருவர் மூதாட்டியை காப்பாற்றிய சம்பவம் பாராட்டுகளை குவித்து வருகிறது.

பிரித்தானியாவின் வடக்கு பகுதியில் ப்ரோனாக் புயலால் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் எனவும் அதிகாரிகளால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

மணிக்கு 65 மைல்கள் வேகத்தில் காற்று வீசும் எனவும், கூடவே மழைக்கும் அதிக வாய்ப்பு உண்டு எனவும் எச்சரித்திருந்தனர்.

தற்போது மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், பெருவெள்ள அபாயம் ஏற்படலாம் எனவும் கருதப்படுகிறது.

இந்த நிலையில் யார்க்ஷயர் பகுதியில் பெருவெள்ளத்தில் சிக்கி காருடன் தத்தளித்த மூதாட்டி ஒருவரை அப்பகுதி வழியாக கடந்து சென்ற ரிச்சர்ட் ஹாம்ஷா என்ற இளைஞர் காப்பாற்றியுள்ளது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

பெருவெள்ள அபாயத்தை கணக்கில் கொள்ளாமல் கார் ஒன்று அந்த வெள்ளம் நோக்கி செலுத்தப்படுவதை பார்த்ததாக கூறும் ரிச்சர்ட், திடீரென்று வெள்ளத்தில் சிக்கி அந்த கார் மூழ்கத் துவங்கியது எனவும், அதில் இருந்த சாரதி வெளியேற கடுமையாக முயற்சி மேற்கொள்வதும் தெரிந்தது என்றார்.

இதனையடுத்து கயிறால் அந்த காரை கட்டி இழுத்து வெள்ளத்தில் இருந்து காப்பாற்றியதாகவும், காரின் கண்ணாடியை உடைத்து அதில் சிக்கியிருந்த மூதாட்டியை காப்பாற்றியதாகவும் ரிச்சர்ட் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஒரு மாத காலம் பெய்து தீர்க்கவேண்டிய மழையானது வேல்ஸின் பல பகுதிகளிலும் கும்ப்ரியாவிலும் பெய்யும் என வானிலை அதிகாரிகள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers