ஏலம் விடப்பட்டதும் கிழிக்கப்பட்ட 10 கோடி மதிப்புள்ள ஓவியம்: ஏன் தெரியுமா?.. வைரல் வீடியோ

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் சிறிய ஓவியம் ஒன்று 10 கோடி ரூபாய்க்கு ஏலம் போன நிலையில், ஏலம் முடிந்த அடுத்த நொடி சுக்குநூறாக கிழிக்கப்பட்டுள்ளது.

லண்டனை சேர்ந்த ஓவியர் பாங்சி தனது ஓவியங்களை, தன்னுடைய குழு மூலம் ஏலம்விட்டு இருக்கிறார். உலக நாடுகளில் இருந்து பலர் இதை வாங்க வந்து இருக்கிறார்கள்.

பாங்சி கடந்த 2006-ல் ஆயில் பெயிண்ட் மூலம் வரைந்த ”கேர்ள் வித் ரெட் பலூன்'' என்று ஓவியம் 10 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு இருக்கிறது.

ஆனால் ஏலம் முடிந்த அடுத்த நொடி, இந்த ஓவியம் சுக்குநூறாக கிழிக்கப்பட்டது. ஏலம் எடுக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்ட அடுத்த நொடியே, இந்த ஓவியம், அப்படியே கீழே இருந்த மிஷன் ஒன்றின் வழியே சென்று கிழிந்தது.

இதற்காக 2006 ஆம் ஆண்டே அந்த ஓவியத்துடன் ஒரு கிழிக்கும் எந்திரத்தை வைத்துள்ளார் ஓவியர் பாங்சி.

ஓவியம் விற்கப்பட்டவுடன் அதை ரிமோட் கன்ட்ரோல் வைத்து கிழித்துள்ளார்கள்

அழிவுதான் பெரிய கலை, பெரிய அரசியல் என்று ஓவியர் பாங்சி தெரிவித்துள்ளார். அதை மக்களுக்கு உணர்த்தவே இப்படி செய்ததாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இது ஏலம் எடுத்தவருக்கு கொடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்று பலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அவர் இதனால் வழக்கு தொடுக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் வேறு சிலர், இப்போதுதான் இது அழகாக இருக்கிறது, இதை வாங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers