நான் பேசிக்கொண்டிருக்கிறேன், உதவியாளர்களை அதட்டிய ஹரி: நெகிழ்ச்சிப் பின்னணி

Report Print Balamanuvelan in பிரித்தானியா

போருக்குப் பின் தற்கொலை செய்து கொண்ட ராணுவ வீரர் ஒருவரின் இளம் விதவையுடன் தனது இழப்பு குறித்தும் பகிர்ந்து கொண்டிருக்கும்போது இடைமறித்து நடையைத் தொடருமாறு கூறிய உதவியாளர்களை பிரித்தானிய இளவரசர் ஹரி அதட்டிய சம்பவத்தை ஆச்சரியத்துடன் பகிர்ந்து கொள்கிறார் அந்த பெண்.

Sydney Harbour Bridge மீது நடந்து கொண்டிருக்கும்போது தன்னுடன் வந்து கொண்டிருந்த Invictus Games அமைப்பின் தூதுவரான Gwen Cherne, கம்போடியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் பணியாற்றியபின் தற்கொலை செய்து கொண்ட ராணுவ வீரரான தனது கணவரைக் குறித்து பேசிக் கொண்டிருக்கும்போது அதை கவனமாக கேட்டுக் கொண்டிருந்த இளவரசர் ஹரி, தானும் இழப்பை அனுபவித்ததாகவும் அதன் பாதிப்பினால்தான் Invictus Games அமைப்பையே தான் தொடங்கியதாகவும் கூறி அவரை ஆறுதல் படுத்திக் கொண்டிருக்கும்போது அவரது உதவியாளர்கள் ஹரியின் பேச்சின் நடுவில் குறுக்கிட்டனர்.

அவர்கள் ஹரியை தொடர்ந்து முன்னேறுமாறு கூற, அதாவது பேச்சை நிறுத்தி விட்டு தொடர்ந்து முன்னேறுமாறு அவரைக் கேட்டுக் கொள்ள, அவர்களிடம் நான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்றார் இளவரசர் ஹரி.

தான் 12 வயதில் தனது தாய் டயானாவை இழந்ததைக் குறிப்பிட்டு அதனால் தான் எவ்வளவு பாதிக்கப்பட்டேன் என்பதைக் கூறி Gwenஐ ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தார் ஹரி.

அந்த நேரத்தில்தான் அவரது உதவியாளர்கள் அவரது பேச்சின் நடுவில் குறுக்கிட்டனர். அந்த சம்பவத்தை நெகிழ்ச்சியுடன் நினைவு கூறும் Gwen, அவரது உதவியாளர்கள்தொடர்ந்து செல்லுமாறு கூற, ஹரியோ தான் அங்கேயே நின்று அவர் பேசுவதைக் கேட்டு விட்டுதான் தொடருவேன் என வலியுறுத்தினாராம்.

அவர் நின்றார், நான் ஒரு உரையாடலின் நடுவில் இருக்கிறேன், நான் அதை முடிக்காமல் இங்கிருந்து நகர மாட்டேன் என்றார், என்று ஆச்சரியத்துடன் தெரிவிக்கிறார் Gwen.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்