பிரித்தானிய இளவரசி மேகனின் பல ஆண்டு கால ஆசை நிறைவேறியது: டயானா 2.0 ஆகிவிட்டார்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி மேகனைக் குறித்து பத்திரிகைகள் முன்பே எழுதியது போலவே, ராஜ அரண்மனை உறுப்பினர்கள் அவரை இரண்டாம் டயானா என்று பொருள்படும் 'Di 2' என அழைக்கத் தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரண்மனை உறுப்பினர் ஒருவர், மேகனும் இளவரசி டயானாவும் பல விடயங்களில் ஒத்திருப்பதால் அவரை அரண்மனை உறுப்பினர்கள் அன்புடன் 'Di 2' என அழைப்பதாக தெரிவித்தார்.

முதன்முதலாக அதிகாரப்பூர்வ சுற்றுலா தொடங்கியதிலிருந்து தனது காதல் கணவரின் தாயாராகிய இளவரசி டயானாவின் நகைகளை அணிந்து மேகன் அவருக்கு தனது மரியாதையை செலுத்தத் தொடங்கியது முதல் அவருக்கு அரண்மனை உறுப்பினர்களின் அன்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது.

இளவரசி டயானாவும் தான் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றில், தனது நகைகள் தனது மகன்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்றும், அதை அவர்களது மனைவிகளாகிய தனது வருங்கால மருமகள்கள் அணிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்து தனது ஆசையை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இளவரசி மேகனும் தனது மாமியாரின் ஆசையின்படியே அவரது நகைகளை முக்கிய நிகழ்வுகளில் அணிந்து கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.

நேற்றைய தினம் டோங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிலும், மேகன் இளவரசி டயானாவின் மோதிரத்தை அணிந்திருந்தார், அதையே அவர் தனது திருமண வரவேற்பிலும் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் சிட்னிக்கு வந்த முதல் நாள் மேகன் இளவரசி டயானாவின் பட்டாம்பூச்சி வடிவ கம்மலை அணிந்திருந்தார்.

பிரபல பிரித்தானிய பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த அந்த அரண்மனை உறுப்பினர், ஹரியின் தாயாருக்கும் இளவரசி மேகனுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளதால், மேகனை 'Di 2' என்று அழைப்பதை நான் கேட்டிருக்கிறேன்.

அது உண்மைதான், அவர்கள் இருவரும் ஒரேபோல்தான் இருக்கிறார்கள் என்றார். தற்போது ராஜ தம்பதி மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணத்தின்போதும், மேகனுக்கும்

டயானாவுக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதை தானும் கவனித்ததாக அரண்மனை போட்டோகிராபர் Mark Stewartம் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers