லண்டனில் சிறுவன் குத்திக்கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுமி அதிரடி கைது

Report Print Vijay Amburore in பிரித்தானியா

லண்டனில் இளைஞர் ஒருவர் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 16 வயது சிறுமியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

லண்டன் நகரத்தில் நடப்பாண்டில் மட்டும் இதுவரை 121 கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதிலும், ஹலோவின் விழா முடிந்த பின்னர் 5 கொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

அந்த வரிசையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று Ayodeji Habeeb Azeez என்ற இளைஞர் கத்தியால் குத்தபட்டு கிடப்பதாக ஆம்புலன்ஸ் நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது.

ஆனால் அடுத்த அரைமணி நேரத்திலே அந்த சிறுவன் பரிதாபமாக பலியாகினர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார் 19 மற்றும் 21 வயதுள்ள இருவரை கைது செய்து விசாரணைக்கு பின் விடுவித்தனர்.

இந்த நிலையில் வழக்கு சம்மந்தமாக 16 வயது சிறுமி கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers