மேகன் மெர்க்கல் திருமணத்தில் வழங்கப்பட்ட போதை மருந்து பொட்டலம்: வெளியான தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரியின் காதல் மனைவி மேகன் மெர்க்கலின் முதல் திருமணத்தின்போது விருந்தாளிகளுக்கு நினைவுப்பரிசாக போதை மருந்து பொட்டலம் அளித்ததாக மேகன் மெர்க்கலின் தந்தை தெரிவித்துள்ளார்.

சட்டப்படி இது குற்றம் என்றாலும் ஜமைக்கா நாட்டை பொறுத்தமட்டில் இது வழக்கமான ஒன்று தான் என்றார்.

தாம் போதை மருந்து எதையும் பயன்படுத்துவதில்லை எனக் கூறும் தோமஸ் மெர்க்கல், தமது அறிவுக்கு எட்டியவரையில் மேகன் மெர்க்கலும் போதை மருந்து பயன்பாட்டுக்கு எதிரானவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மேகன் மெர்க்கலுக்கும் Trevor Engelson என்பவருக்கும் ஜமைக்காவில் உள்ள Ocho Rios பகுதியில் வைத்து மிக சிறப்பாக திருமணம் நடந்தது.

4 நாட்கள் தொடர்ந்த இந்த திருமண விழா கொண்டாட்டமானது பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது.

மொத்தம் 102 முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்ட மேகன் மெர்க்கலின் இந்த முதல் திருமணத்தில் விருந்தாளிகளுக்கு வழங்கப்பட்ட நினைவுப்பரிசில் போதை மருந்து பொட்டலமும் அளித்துள்ளனர்.

Trevor Engelson ஹாலிவுட்டில் தற்போது திரைப்பட்ட தயாரிப்பாளராக செயல்பட்டு வருகிறார். திருமணம் முடிந்த 2 ஆண்டுகளில் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர்.

2013 ஆகஸ்டு மாதம் உத்தியோகபூர்வமாக மேகன் மெர்க்கல் விவாகரத்து பெற்றுள்ளார்.

தற்போது மேகன் மெர்க்கல் காரணமாக பிரித்தானிய இளவரசர்கள் இடையே கருத்துவேறுபாடு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டனின் குடும்பத்தார் காரணமாகவே மேகன் மெர்க்கல், அரண்மனையில் கேட் மிடில்டனால் புறக்கணிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குட்டி இளவரசி சார்லோட் விவகாரத்திலேயே முதன் முறையாக கேட் மிடில்டன் மற்றும் இளவரசர் ஹரியின் காதல் மனைவியான மேகன் மெர்க்கல் ஆகியோருக்கு இடையே கருத்துவேறுபாடு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்