அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்கள்: பரிதாபமாக பலியான இளம்பெண்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இங்கிலாந்தின் அஸ்ஸெட் பகுதியில் நேற்று ஏற்பட்ட சாலை விபத்தில் 18 வயது இளம்பெண் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெஸ்ட் யார்க்ஷயர், அஸ்ஸெட் அருகே உள்ள சாலையில் நேற்று இரவு 7.30 மணிக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதில் வேகமாக வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டதில், ஜேமி-லீ ஹட்சன் என்ற 18 வயது பெண் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணை மேற்கொன்டு வருகின்றனர்.

இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள இளம்பெண்ணின் தந்தை ஜான் ஐயன், நேற்று என்னுடைய மகள் துரதிஸ்டவசமாக விபத்தில் சிக்கி இறந்து விட்டாள்.

இந்த சம்பவம் எங்களுடைய குடும்பம் மற்றும் உறவினர்களை பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது. எங்களுடைய குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், என்னுடைய மகளை மீட்க போராடிய ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் என்னுடைய நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.


மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...