கருக்கலைப்பு செய்ய வேறு இடத்திலிருந்து பிரித்தானியா வந்த 12 வயது சிறுமி: வெளியான பின்னணி

Report Print Raju Raju in பிரித்தானியா

கருக்கலைப்பு செய்வதற்காக 12 வயது சிறுமி வடக்கு அயர்லாந்தில் இருந்து பிரித்தானியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

12 சிறுமி ஒருவர் பலாத்காரத்துக்கு ஆளான காரணத்தால் கர்ப்பமானார்.

இதையடுத்து அவருக்கு கருக்கலைப்பு செய்ய உத்தரவிடப்பட்டது.

வடக்கு அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்யப்படுவது சட்டப்படி குற்றம் என்பதால் சிறுமி பொலிஸ் பாதுகாப்புடன் பிரித்தானியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இது குறித்து அயர்லாந்தின் Belfast நகரில் உள்ள கர்ப்பிணிகள் ஆலோசனை மையத்தின் முன்னாள் தலைவர் டவுன் புர்வீஸ் கூறுகையில், வடக்கு அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்வது பெரும் குற்றமாகும்.

பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சமயத்தில் மட்டும் கருக்கலைப்பு செய்ய அனுமதி தரப்படும்.

இப்படி கருக்கலைப்பு செய்வதற்காக பல பெண்கள் இங்கிருந்து பிரித்தானியாவுக்கு சென்றுள்ளார்கள்.

இது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கஷ்டத்தை கொடுக்கிறது என கூறியுள்ளார்.

இதனிடையில், வடக்கு அயர்லாந்தில் கடந்த 2017 - 2018ல் சட்டபூர்வமாக 12 கருக்கலைப்புகள் செய்யப்பட்டுள்ளதும், கருக்கலைப்பு செய்வதற்காக 900 பெண்கள் பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றதும் தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers