Brexit மாதத்தில் இது நடக்கலாம்: பிரித்தானியர்களுக்கு ஓர் எச்சரிக்கை தகவல்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ஐரோப்பிய ஒன்றியத்துடன் எந்த ஒப்பந்தமும் செய்யாமலே வெளியேறும் பட்சத்தில், பிரெக்சிட்டால் பிரித்தானியாவில் கடும் உணவுப்பிரச்சினைகள் ஏற்படும் என பிரித்தானியாவின் முன்னணி வர்த்தக நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

பிரஷ்ஷான காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் போன்ற உணவுப்பொருட்களுக்காக பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தையே சார்ந்திருப்பதால், ஐரோப்பிய ஒன்றியத்துடன் அது தொடர்பான ஒப்பந்தங்கள் எதுவும் செய்யப்படாமலே பிரெக்சிட் நிறைவேற்றப்படும் பட்சத்தில், அதாவது, மார்ச் மாதத்தில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் பட்சத்தில், கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளது என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

பிரித்தானியாவின் முன்னணி வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்றில், எல்லையில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் வரி விதிப்பால் ஏற்படும் விலையுயர்வு ஆகியவற்றால் உணவுப்பொருட்கள் பற்றாக்குறை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதுவும் சரியாக பிரெக்சிட் நடைபெறவுள்ள மார்ச் மாதத்தில் காய்கறிகள், பழங்கள் சீஸன் இல்லாததால், பிரித்தானியாவில் பயன்படுத்தப்படும் 90 சதவிகிதம் கீரைகள், 80 சதவிகிதம் தக்காளிப்பழங்கள் மற்றும் 70 சதவிகிதம் இதர பழங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அந்த நேரத்தில் இறக்குமதி செய்யப்படும் என்பதால் நிலைமை மிக மோசமாகும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அக்கறையுடன் செயல்படுபவர்கள் என்னும் முறையில், வர்த்தகர்களாகிய நாங்கள் எங்களால் முடிந்தவரையில் பொருட்களை சேகரித்து வைத்திருக்கிறோம்,

என்றாலும் சேமிப்புக் கிடங்குகள் குறைவாகவே இருப்பதோடு, உறைய வைத்தும், குளிர்சாதனப்பெட்டியிலும் வைத்து சேமிக்கப்பட்டிருந்த உணவுப்பொருட்களும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு விட்டன.

அப்படியே அதிக சேமிப்பு கிடங்குகள் இருந்தாலும்கூட, கீரைகள் பழங்கள் போன்றவற்றை சேமித்து வைக்க முடியாது.

எனவே, நாடாளுமன்றத்தில் உள்ள உங்கள் சகாக்களுடன் கூடிப்பேசி, உடனடியாக ஒப்பந்தங்கள் இன்றி நிறைவேற்றப்படும் பிரெக்சிட்டால் ஏற்படவிருக்கும் அதிர்ச்சியை தவிர்ப்பதற்காக,

ஒரு நல்ல தீர்வை எடுத்து பிரித்தானிய நுகர்வோரை இக்கட்டான சூழலுக்குள் விடாமல் பார்த்துக் கொள்ளுமாறு உங்களை கேட்டுக் கொள்ளுகிறோம் என்று அந்த கடிதத்தில் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers