காதல் மனைவியுடன் உணவருந்த தனி விமானத்தில் வந்த ஹரி: எத்தனை பவுண்டுகள் செலவிட்டார்?

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரி காதலர் தினத்தில் தமது கர்ப்பிணி மனைவியுடன் இரவு உணவருந்த 6 மணி நேரம் பயணம் செய்து லண்டன் திரும்பியுள்ளார்.

பிரித்தானிய இளவரசர் ஹரி ஆர்டிக் வட்டத்தில் நோர்வே ஆயுதப்படைகளால் நடத்தப்படும் பன்னாட்டுக் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட சென்றிருந்தார்.

இந்த நிலையில் திருமணம் முடித்து தங்களது முதல் காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் இளவரசர் ஹரி, சுமார் 2,730 மைலகள் தாண்டி, 6 மணி நேரம் பயணம் செய்து தனி விமானத்தில் லண்டன் திரும்பியுள்ளார்.

இதற்காக பொதுமக்கள் வரிப்பணத்தில் 26,000 பவுண்டுகள் செலவாகியுள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

33 வயதான ஹரி தமது 7 மாத கர்ப்பிணி மனைவியை விட்டுவிட்டு நோர்வேயில் நடைபெறும் ஆயுதப்படைகளால் நடத்தப்படும் பயிற்சியில் கலந்து கொள்ள சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்