லொட்டரியில் 152 மில்லியன் பவுண்டுகளை மொத்தமாக அள்ளிய சகோதரிகள்: வெளியான தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

அயர்லாந்தில் 7 சகோதரர்கள் சேர்ந்து லொட்டரியில் 152 மில்லியன் பவுண்டுகளை மொத்தமாக அள்ளிய சம்பவம் வெளியாகியுள்ளது.

குறித்த சகோதரர்கள் ஒன்றிணைந்து வெல்லும் இரண்டாவது பெருந்தொகை இது என தெரியவந்துள்ளது.

அயர்லாந்தின் Meath பகுதியை சேர்ந்த சார்லி ஷெரிடன் என்பவரும் அவரது 6 சகோதரிகளுமே யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் 152 மில்லியன் பவுண்டுகளை மொத்தமாக அள்ளியவர்கள்.

தங்களது நீண்ட நாள் கனவு நிறைவேறியதாக கூறும் இந்த 7 சகோதரர்களும், இதற்கு முன்னர் தேசிய லொட்டரியிலும் பெருந்தொகையை வென்றுள்ளனர்.

தற்போது வென்றுள்ள தொகையை தங்களது பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் பகிர்ந்தளிக்க இருப்பதாக கூறிய எழுவரும்,

இது தங்களின் வாழ்க்கையை மாற்ற தாங்கள் அனுமதிப்பதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

லொட்டரியில் பரிசு கிடைத்துள்ள தகவல் தங்களுக்கு தெரியவந்ததும் தங்களால் தூங்க முடியவில்லை என கூறும் சகோதரிகள், மகிழ்ச்சியை அனைவரிடமும் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers