சாலையில் வசிக்கும் நபரை நம்பி தனது ஏ.டி.எம் கார்டை கொடுத்த நபர்.... அடுத்து என்ன ஆனது தெரியுமா? 115,000 முறை பார்க்கப்பட்ட வீடியோ

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் வீடில்லாமல் சாலையில் வசித்த நபரிடம் ஒருவர் தனது ஏடிஎம் கார்டை கொடுத்த நிலையில் அதை மீண்டும் அவரிடமே அந்த நபர் கொடுத்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newcastle-லில் உள்ள ஒரு உணவகத்தில் நபர் ஒருவர் தனது நண்பர்களுடன் உட்கார்ந்திருந்தார்.

அப்போது வீடில்லாமல் சாலையில் வசிக்கும் நபர் ஒருவர் உணவகத்தில் உட்கார்ந்திருந்த அந்த நபர் அருகில் வந்தார்.

பின்னர் அவரிடம் பணம் வேண்டும் என கேட்டார். இதையடுத்து தன்னிடம் பணம் கேட்டவரிடம் தன்னுடைய ஏடிஎம் கார்டை அவர் கொடுத்ததுடன் ரகசிய பின் நம்பரையும் கூறினார்.

மேலும் £20 பணத்தை எடிஎம்-ல் இருந்து எடுத்து கொள்ளுமாறு கூறினார்.

வீடில்லாத நபர் தன்னுடைய ஏடிஎம் கார்டை அப்படியே எடுத்து கொண்டு சென்றுவிடுவார் என அவர் நினைக்காமல் உதவி செய்தார்.

இதன் பின்னர் வீடில்லாத அந்த நபரும் சரியாக £20 பணத்தை மட்டும் ஏடிஎம்மில் எடுத்து கொண்டு தனக்கு கார்டை கொடுத்த நபரிடமே அதை திருப்பி கொடுத்தார்.

பின்னர் அவரிடம் கை கொடுத்து குலுக்கிவிட்டு சென்றுவிட்டார்.

இது குறித்த வீடியோ இதுவரை 115,000 முறை பார்க்கப்பட்டுள்ளது.

தன்னுடைய ஏடிஎம் கார்டை அவருக்கு நம்பி கொடுத்த நபருக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் அதை நேர்மையாக திருப்பி கொடுத்த நபரையும் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்