அரிய நோயினால் லண்டனில் உயிருக்கு போராடிய தமிழ் சிறுமி: மீண்டு வந்த நெகிழ்ச்சி

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

லண்டனை சேர்ந்த ஹரிணி ராசலிங்கம் என்ற தமிழ் சிறுமி மேப்பிள் சிரப் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு (Maple syrup urine disease)மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்துள்ளார்.

Maple syrup urine disease என்ற நோய் ஒரு புரதக்கோளாறு ஆகும். இது உடலில் உள்ள புரத கட்டிகள் (அமினோ அமிலங்கள்) ஒழுங்காக செயல்பட முடியாத ஒரு மரபணு நோய்.

வாந்தி, உடலில் ஆற்றல் இல்லாதிருத்தல், அசாதாரண இயக்கங்கள் மற்றும் தாமதமான உடல் வளர்ச்சி போன்ற பாதிப்புகள் இந்த நோயால் ஏற்படுகின்றன.

திடீரென உடல் எடை குறைந்த ஹரிணியை அவரது பெற்றோர் Evelina London Children’s மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு குழந்தைகள் நல மருத்துவர் Helen Mundy, ஹரிணியை சோதனை செய்து பார்த்ததில் Maple syrup urine நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ரத்த பரிசோதனை செய்யப்பட்ட பிறகு, உடனடியாக ஹரிணியை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தியதன் பேரில், அவருக்கு சிகிச்சை தொடங்கப்பட்டது.

சுமார் 3 வாரங்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு ஹரிணியின் அமினோ அமில அளவுகள் குறைக்கப்பட்டது. தற்போது இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் ஹிரிணி நலமாக இருக்கிறார் என அவரது அம்மா பிரிமினி கமல்நாதன் தெரிவித்துள்ளார்.

தற்போது அவருக்கு புரதம் குறைக்கப்பட்ட உணவு கொடுத்து வருகிறோம். இறைச்சி, மீன் மற்றும் சீன் போன்ற உணவுகளை தடை செய்துள்ளோம்.

அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அந்த பிஞ்சு உடலில் வயர்கள் மற்றும் மருந்துகளை செலுத்தும்போது பார்ப்பதற்கு வேதனையாக இருந்தது. நாங்கள் இந்த நோயை முன்கூட்டியே கண்டறியவில்லை என்றால் ஹரிணி தற்போது எங்களுடன் இருந்திருக்கமாட்டாள்.

அந்த வகையில் நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி, உணவுகட்டுப்பாடுகள் மூலம் தற்போது எங்களது மகள் ஆரோக்கியமாக இருக்கிறாள் என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers