இலங்கை குண்டு வெடிப்பு: அதிசயமாக உயிர் தப்பிய பிரித்தானிய குடும்பம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தாமதமாக தூங்கி எழுந்த ஒரு பிரித்தானிய குடும்பம் இலங்கை குண்டு வெடிப்பில் தப்பிய அதிசய சம்பவம் நடைபெற்றுள்ளது.

Surreyயில் மருத்துவராக பணி புரியும் Dr ஜூலியன் இம்மானுவேல் (48) குண்டு வெடித்த ஹோட்டல்களில் ஒன்றான சின்னமன் ஹோட்டலில் தனது குடும்பத்துடன் தங்கியிருந்தார்.

மனைவி மரியா (39), மகள் ஜெசிந்தா (11), மகன் நீதன் (7)ஆகியோருடன் இலங்கையிலிருந்து பேசிய ஜூலியன், தாங்கள் அன்று சற்று சோம்பலாக இருந்ததாகவும் கால தாமதமாகவே எழுந்ததாகவும் தெரிவிக்கிறார்.

தாங்கள் ஒன்பதாவது தளத்தில் இருந்ததாகவும், காலை உணவுக்கு பேஸ்மெண்டுக்கு செல்ல வேண்டும் என்றும் தாங்கள் தாமதமாக எழுந்ததால் குண்டு வெடிப்பிலிருந்து தப்பியதாகவும் தெரிவிக்கிறார் ஜூலியன்.

நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று கூறும் அவர், நம்மிடம் ஒன்றும் இல்லை எல்லாம் கடவுள் கையில்தான் இருக்கிறது என்கிறார்.

உடனடியாக தாங்கள் வெளியேற்றப்பட்டதாகவும் திரும்ப இரண்டு மணி நேரத்திற்கு ஹோட்டலுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறும் ஜூலியன், அதற்கு பிறகுதான் பல வெடிகுண்டுகள் வெடித்ததை தாங்கள் அறிந்து கொண்டதாக தெரிவிக்கிறார்.

நாங்கள் மட்டும் சரியான நேரத்திற்கு எழுந்திருந்தோமென்றால் காலை உணவு அருந்த சென்றிருப்போம் என்று கூறும் ஜூலியன், தாங்கள் உயிர் பிழைத்தது ஒரு அற்புதம் என்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்