பிரித்தானிய பயணிக்கு துப்பாக்கி முனையில் நடந்த துயரம்: முகம் சிதைந்த நிலையில் மீட்பு

Report Print Arbin Arbin in பிரித்தானியா

அவுஸ்திரேலியாவில் பிரித்தானிய இளம்பெண் ஒருவர் இளைஞரால் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு இரையாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுலா பயணியான 24 வயது எலிஷா கிரீர் கடந்த 2017, ஜனவரி மாதம் விருந்து ஒன்றில் வைத்து சம வயது மார்ட்டின் என்பவரை சந்தித்துள்ளார்.

இருவரும் ஒன்றாக அவுஸ்திரேலியாவின் முக்கிய பகுதிகளில் வலம்வந்துள்ளனர்.

இந்த நிலையில் ஒருநாள் எலிஷா தங்கியிருந்த ஹொட்டலில் வைத்து வலுக்கட்டாயமாக உறவில் ஈடுபட வைத்துள்ளார் மார்ட்டின்.

தொடர்ந்து அங்கிருந்து அவரை கடத்திச் சென்ற மார்ட்டின் ஒருவார காலம் கொடுமைப்படுத்தியுள்ளார்.

மேலும் துப்பாக்கி முனையில் சுமார் 930 மைல்கள் தொலைவு எலிஷாவை வாகனம் ஓட்ட நிர்பந்தித்துள்ளார்.

கடுமையான சித்திரவதைக்கு தாம் உள்ளானதாக கூறும் எலிஷா, தம்மிடம் இருந்த பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகளை கூட மார்ட்டின் தமக்கு தர மறுத்ததாகவும்,

பலமுறை உறவுக்கு நிர்பந்தித்து தம்மை கர்ப்பிணியாக்க முயன்றதாகவும் எலிஷா விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

ஒரு பிள்ளைக்கு தாயானால், மேலும் தம்மை அடிமையாக நடத்தலாம் என மார்ட்டின் எண்ணியிருக்கலாம் என கூறும் எலிஷா,

வழியில் தம்மை கவனித்த நபர் ஒருவராலையே மர்ட்டினின் சித்திரவதையில் இருந்து மீண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் மார்ட்டின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமான நிலையில் தண்டனையை எதிர்நோக்கி உள்ளார்.

மே 28 ஆம் திகதி இறுதி தீர்ப்பு வெளியாவதாக கூறும் எலிஷா, தமக்கு நேர்ந்த துயரத்தை ஊடகம் ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்