மனம் வலிக்கிறது.. அமைதியை விரும்புகிறோம்.. பிரித்தானியாவில் வாழும் இலங்கையை சேர்ந்த இளம்பெண் வேதனை

Report Print Raju Raju in பிரித்தானியா

இலங்கையை சேர்ந்த பெற்றோருக்கு பிறந்த இளம்பெண் பிரித்தானியாவில் பத்திரிக்கையாளராக உள்ள நிலையில் இலங்கை குண்டு வெடிப்பு தாக்குதல் மற்றும் இஸ்லாமியர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து மனம் உருக பேசியுள்ளார்.

பிரித்தானியாவில் பத்திரிக்கையாளராக இருப்பவர் தஸ்னிம் நசீர். இவரின் பெற்றோர் மற்றும் கணவர் இலங்கையில் பிறந்தவர்கள் ஆவார்கள்.

தஸ்னிம் அளித்துள்ள பேட்டியில், நான் பிரித்தானியாவில் இலங்கையை சேர்ந்த பெற்றோருக்கு பிறந்தேன்.

என் கணவரும் இலங்கையர் தான். சிறுவயதில் இலங்கையில் தான் நான் வளர்ந்தேன், அங்கு தான் என் திருமணமும் நடந்தது.

வருடா வருடம் விடுமுறைக்கு இலங்கைக்கு சென்று வருகிறேன்.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்த செய்தி கேட்டு என் மனம் வலித்தது. இதில் உயிரிழந்தவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

இலங்கையில் உள்ள பெரும்பான்மையான மக்கள் அன்பையும், அமைதியையும் தான் விரும்புகிறார்கள்.

ஈஸ்டர் தின தாக்குதலுக்கு பின்னர் இஸ்லாமியர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த சமயத்தில் என் சொந்த குடும்பம் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை, இரவு முழுவதும் பயத்துடன் வீட்டுக்குள்ளேயே இருந்தார்கள்.

தீவிரவாதம் மற்றும் வெறுப்பை பரப்புவதை எதிர்த்து நாம் ஒற்றுமையாக போராட வேண்டும்.

அதிகாரத்தில் உள்ளவர்கள் சமாதானத்திற்கும் ஒற்றுமைக்கும் அழைப்பு விடுத்து, ஒவ்வொரு சமூகமும் பாதுகாப்பாக உணரப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்