லட்சக்கணக்கில் மதிப்பிலான வைர பல்லை வாயில் பொருத்தியிருந்த கோடீஸ்வரர்... அதனால் அவருக்கு நேர்ந்த பிரச்சனை

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் கோடீஸ்வர தொழிலதிபரின் மகனை கடத்திய கும்பல் அவர் வாய்க்குள் பொருத்தப்பட்டிருந்த £3,000 மதிப்புள்ள வைர பல்லை பிடுங்கியுள்ளனர்.

சாலி அல் என்ற இளைஞர் கோடீஸ்வர தொழிலதிபரின் மகன் ஆவார். இவருக்கு லிபன் அலி (24) என்ற நபர் நண்பராகியுள்ளார்.

சாலி கோடீஸ்வரரின் மகன் என்பதை அறிந்து கொண்ட லிபன் அவர் வாய்க்குள் வைர பல் பொருத்தப்பட்டிருந்ததையும் பார்த்துள்ளார்.

அந்த பல்லை அவரிடம் இருந்து எடுக்கவேண்டும் என லிபனுக்கு ஆசை ஏற்பட்டது.

இதையடுத்து தனது நண்பர்கள் துணையுடன் சாலியை கடத்தி £3,000 மதிப்புள்ள அந்த வைரப்பல்லை பிடுங்குவதோடு, அவர் தந்தையிடம் அதிகளவில் பண பறிக்கவும் லிபன் திட்டமிட்டார்.

அதன்படி இதற்கான திட்டத்தை கரீன் டிம்பிள் (44) என்ற பெண் வகுத்தார்.

பின்னர் லிபன், கரீன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் சாலியை கடத்தி ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அவர் வாயிலிருந்து வைர பல்லை வெளியில் எடுத்தனர்.

இதையடுத்து சாலி குடும்பத்தாருக்கு போன் செய்து, எங்களுக்கு £50,000 பணத்தை கொடுக்கவில்லை என்றால் சாலிக்கு அதிகளவு ஹெராயின் போதை மருந்துகளை கொடுத்து கொன்றுவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.

பின்னர் இது தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் போன் நம்பரை வைத்து பொலிசார் சாலி இருந்த இடத்தை கண்டுபிடித்து அவரை மீட்டு அந்த கும்பலை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்