ரியான் ஏர் விமானத்தில் பிரித்தானிய பெண் திடீர் மரணம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

ஸ்பெயினிலிருந்து புறப்படவிருந்த ரியான் ஏர் விமானத்தில் பிரித்தானிய பெண் மரணமடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஸ்பெயின் நாட்டின் பால்மா விமான நிலையத்திலிருந்து, எடின்பர்க் நோக்கி செல்லவிருந்த ரியான் ஏர் விமானத்தில் பிரித்தானியாவை சேர்ந்த 58 வயதான பெண் ஒருவர் மரணமடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக பால்மா விமான நிலையத்திலிருந்து 3 மணி நேரம் கழித்து உள்ளூர் நேரப்படி மதியம் 3.20 மணிக்கு தான் விமானம் புறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரியான் ஏர் விமான செய்தித்தொடர்பாளர் பேசுகையில், விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக பிரித்தானியாவை சேர்ந்த 58 வயது பெண்ணுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அதற்குள் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். அவருடைய குடும்பத்தார்க்கு எங்கள் நிர்வாகத்தின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள் என தெரிவித்துள்ளார்.

இதனை ஸ்பானிஷ் விமான ஆபரேட்டர் உறுதிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பான விசாரணை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நாளைய தினம் அவருக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்