ஐந்து குழந்தைகளை சமாளிக்கும் ஒரு அப்பா: ஒரு சுவாரஸ்ய வீடியோ!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ஒரு தந்தை தனது ஐந்து குழந்தைகளையும் சமாளித்து எப்படி வாக்கிங் அழைத்துச் செல்கிறார் என்பதைக் காட்டும் சுவாரஸ்ய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் எந்த இடம் என்று சரியாக தெரியாத ஒரு இடத்தில் ஒரு தந்தை தனது பிள்ளைகளை வாக்கிங் அழைத்துச் செல்கிறார்.

கழுத்தில் ஒரு குழந்தையைத் தூக்கிக்கொண்டு, இடது கையில் ஒரு குழந்தையைப் பிடித்துக் கொண்டு செல்லும் அந்த தந்தை, குழந்தையை வைத்து தள்ளிச் செல்லும் ஒரு வண்டியை வலது கையால் தள்ளிச் செல்கிறார்.

அவரை வீடியோ எடுக்கும் நபர் அவர் தள்ளிக் கொண்டு செல்லும் வண்டியை குளோசப்பில் காட்டும்போதுதான், அதில் ஒரு குழந்தை அல்ல, மூன்று குழந்தைகள் உள்ளன என்பது தெரிய வருகிறது.

அவை மூன்றும் ஒரே பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் போல் தோன்றுகிறது.

வரும் நாட்களில் ஐந்து குழந்தைகளை கவனித்துக் கொள்வதே அந்த தந்தைக்கு முழு நேர வேலையாகிவிடும் என்பது போல் தோன்றினாலும், இந்த வீடியோவைப் பார்க்கும்போது எல்லாரையும் அவர் சமாளிப்பார் என்றே தோன்றுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...