காலையில் தூங்கி எழுந்த போது கோடீஸ்வரராக மாறிய நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த நபர்!

Report Print Raju Raju in பிரித்தானியா

அயர்லாந்தில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த நபருக்கு லொட்டரியில் €1 மில்லியன் பரிசு விழுந்த காரணத்தால் தூங்கி எழும் போது கோடீஸ்வரராக கண் விழித்துள்ளார்.

30களில் உள்ள ஒரு நபர் ஒருவர் சூதாட்டம் ஆடுவதை வழக்கமாக கொண்டவராக இருந்தார், அவருக்கு லொட்டரி வாங்கும் பழக்கமும் உள்ளது.

இந்நிலையில் லோட்டோ பிளஸ் லொட்டரி பம்பர் குலுக்கலில் அவருக்கு €1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது.

குறித்த லொட்டரி சீட்டை அவர் ஸ்பர் பெட்ரோல் நிலையத்தில் உள்ள கடையில் வாங்கியுள்ளார்.

இது குறித்து அதன் உரிமையாளர் பிலில் கியீர்னன் கூறுகையில், என் கடையில் லொட்டரி சீட்டு வாங்கிய நபருக்கு பரிசு விழுந்தது மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இந்த செய்தியை வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்வேன், பரிசு வென்ற நபரை சந்திக்க ஆர்வமாக உள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்