முக்கிய பாதுகாப்பு அதிகாரி பணிக்கு ஆள் தேடும் ராணி: சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Report Print Vijay Amburore in பிரித்தானியா

ராணியின் பிரதான இல்லத்தை பாதுகாக்கும் முக்கிய அதிகாரி பணிக்கு அரண்மனை நிர்வாகம் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் கூடிய நபரை தேடி வருகிறது.

ராணியின் பிரதான இல்லத்தை மையமாக கொண்ட முக்கியமான கட்டிடங்களுக்கு, 'முக்கிய பாதுகாப்பு சேவையை' வழங்குவதற்காக ஒரு தனிநபரை அரண்மனை நிர்வாகம் தேடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பக்கிங்ஹாம் அரண்மனையில் இருக்கும் தீயணைப்பு குழுவில் இணைந்து 24 மணி நேரமும் சேவையை வழங்கிட வேண்டும். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அந்த நபர் தான் முதல் ஆளாக செயல்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அங்கீகரிக்கப்பட்ட பார்வையாளர்களை வரவேற்கும் வேலையினையும் அவர் மேற்கொள்வார். ஒரு நல்ல அளவிலான உடல் ஆரோக்கியத்துடன் வரையறுக்கப்பட்ட உயரத்துடனும் அந்த நபர் இருக்க வேண்டும்.

ஊழியர்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் உட்பட பலதரப்பட்ட மக்களுடன் நெருக்கமாக அந்த அதிகாரி பழகுவார்.

அரண்மனையில் இருக்கும் பல தளங்களிலும் தீ பாதுகாப்பு அபாயங்களைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யும் பொறுப்பு அந்த நபருக்கு உண்டு. முதலுதவி செய்வதற்கான பயிற்சியினை அவர் பெற்றிருக்க வேண்டும்.

இத்தகைய பொறுப்புகளுடன் தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு உணவு மற்றும் பொழுதுபோக்கு வசதிகளுடன் 23,000 பவுண்டுகள் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்