தந்தைக்கு 8 வருட சிறைத்தண்டனை வாங்கிக்கொடுத்த 15 வயது மகள்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இங்கிலாந்தில் தினமும் தன்னுடைய அம்மாவை கொடுமைப்படுத்தி வந்த தந்தைக்கு 15 வயது சிறுமி 8 வருட சிறைத்தண்டனை வாங்கிக்கொடுத்துள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த கிளிஃப்டன் (53) என்பவர் தன்னுடைய 17 வயதில் வீடியோ கடை ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு தானியா (34) என்பவரை சந்தித்து உடனே காதல் வலையில் விழுந்துள்ளார்.

அடுத்த சில வாரங்களில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்த சில நாட்கள் கழித்து கிளிஃப்டன் தன்னுடைய மனைவியை கொடுமைப்படுத்த ஆரம்பித்துள்ளார்.

34 வருடங்கள் கிளிஃப்டன் தன்னுடைய வன்முறையை தொடர்ந்து நடத்தி வந்துள்ளார். தானியாவும் அதனை தாங்கிக்கொண்டே போராட்டம் நடத்தி வந்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒருநாள் இரவு கிளிஃப்டன் கதவை உடைத்துக்கொண்டு கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளார். தன்னுடைய தந்தை நடத்திய தாக்குதலை நீண்ட நாட்களாகவே உற்றுக்கவனித்து வந்த 15 வயது சிறுமி மெய்சா ரோசாடோ, நீண்ட நேரமாக அழுதுகொண்டே விட்டுவிடுமாறு தந்தையிடம் கெஞ்சியுள்ளார்.

ஆனால் அதனை பொறுப்படுத்தாமல் கிளிஃப்டனும் தாக்குதல் நடத்திக்கொண்டே இருந்ததால், உடனே தன்னுடைய செல்போனில் தாக்குதலை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

இதற்கிடையில் சத்தம் கேட்டு ரோந்து பணியில் ஈடுபட்ட பொலிஸார் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் தாக்குதலில் இருந்து தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்த தானியாவின் தலையில் 5 தையல்கள் போடப்பட்டன.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட கிளிஃப்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு மெய்சா தன்னுடைய செல்போனில் பதிவு செய்த வீடியோவினை சாட்சியமாக அளித்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி கிளிஃப்டனுக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த நிலையில் சம்பவம் குறித்து பேசிய சிறுமி, என்னுடைய தந்தையை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நான் சிறைக்கு சென்று சந்தித்து வருகிறேன். வீடியோ எடுத்து அவரை சிறையில் தள்ளியதை நினைத்து நான் ஒருபோதும் வருந்தியது கிடையாது என எனக்கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்