தந்தையால் தனக்கு நிகழபோகும் விபரீதத்தை அறியாமல் சிரித்து கொண்டிருந்த சிறுமி... தாய் கண்முன்னர் நடந்த பயங்கரம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் கவலையில்லாமல் எப்போதும் மகிழ்ச்சியாக சிரித்து கொண்டிருந்த மகளை பெற்ற தந்தையே கொலை செய்த நிலையில் அது தொடர்பாக சிறுமியின் தாய் வேதனையுடன் பேசியுள்ளார்.

West Midlands-ஐ சேர்ந்தவர் வில்லியம் பில்லிங்கம். இவர் ட்ரேசி (35) என்ற பெண்ணுடன் வாழ்ந்து வந்த நிலையில் தம்பதிக்கு மைலி (8) என்ற மகள் இருந்தாள்.

இந்நிலையில் ட்ரேசி வில்லியமுடன் சண்டை போட்டு அவரை பிரிந்துள்ளார்.

மேலும் வேறு நபருடன் ட்ரேசி காதல் வயப்பட்டார். இதையறிந்த வில்லியம் கடந்தாண்டு ஜனவரி மாதம் ட்ரேசி வீட்டுக்கு வந்தார்.

அப்போது மிகவும் கோபத்தில் இருந்தார் வில்லியம், அந்த சமயத்தில் சிரித்து கொண்டு விளையாடி கொண்டிருந்த சிறுமி மைலியை இரக்கமின்றி கத்தியால் குத்தி கொலை செய்தார் வில்லியம்.

இந்த சம்பவம் ட்ரேசியின் கண்முன்னாலேயே நடந்தது, வலியால் கதறிய மைலியின் மரண ஓலத்தை கேட்டு துடித்து போனார் ட்ரேசி.

இதை தொடர்ந்து பொலிசார் வில்லியமை கைது செய்தனர், அவருக்கு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதோடு குறைந்தபட்சம் 27 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

இதையடுத்து வில்லியம் தற்போது சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில் வில்லியம் ஏற்கனவே குற்ற பின்னணியை கொண்டவர் என தாமதமாகவே ட்ரேசிக்கு தெரியவந்துள்ளது.

இது குறித்து சமீபத்தில் பேசிய அவர், மோசமான வன்முறை குணம் கொண்ட பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை மீட்க சரியான சட்டம் இயற்றப்பட வேண்டும்.

குற்றபின்னணி கொண்டவர்களிடம் குழந்தைகள் வளரக்கூடாது.

வில்லியம் மிகபெரிய குற்றப்பின்னணியை கொண்டவர் என அதிகாரிகள் யாரும் முன்னரே எனக்கு எச்சரிக்கை விடுக்கவில்லை.

தனது மகனை கொல்லவும் முன்னர் அவர் துணிந்திருக்கிறார், ஏற்கனவே பல வழக்குகள் அவர் மீது உள்ள நிலையில் சிறைக்கும் சென்றிருக்கிறார்.

என் மற்ற பிள்ளைகள் முன்னால் வில்லியம் குறித்து நான் பேசுவதேயில்லை, அந்த கொடூரன் குறித்த எந்த நினைவுகளும் அவர்களுக்கு வரக்கூடாது.

கொல்லப்பட்ட மைலி எப்போதும் வாழ்க்கையில் கவலைப்பட்டதும், அழுததும் கிடையாது. எப்போதும் சிரித்த முகத்தோடு தான் இருப்பாள்.

அவளுக்கு நடனம் ஆடுவது என்றால் அதிகம் பிடிக்கும்.அவள் இன்னும் என்னோடு வாழ்ந்து கொண்டிருப்பதாகவே உணர்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்