பிரித்தானிய நாடாளுமன்றம் முடக்கப்படும் நிலையில் அடுத்து என்ன நடக்கும்? வெளிவரும் தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய நாடாளுமன்றத்தை 5 வார காலம் முடக்க ராணியார் எலிசபெத் அனுமதி அளித்த நிலையில், நாடு முழுவதும் போராட்டங்களுக்கு அது வழிவகுத்துள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் திகதி முதல் தொடர்ந்து 5 வார காலம் பிரித்தானியா நாடாளுமன்றம் முடக்கப்பட்டிருக்கும்.

இந்த காலகட்டமானது Brexit சிக்கலுக்கு ஒரு தீர்வை எட்டும் காலமாக அமையும் என ஆளும் சில அரசியல்வாதிகளும் எதிர்க்கட்சிகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆனால், Brexit தொடர்பாக பொதுமக்கள் பலர் நாடாளுமன்ற வளாகத்தில் கூடி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் நாடாளுமன்றம் முடக்கப்பட்ட பின்னர் என்ன நடக்கும் என்பது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியா ராணியாரின் அனுமதிப்படி நாடாளுமன்றம் முடக்கப்படும் இறுதி முடிவானது செப்டம்பர் 9 முதல் 12 ஆம் திகதிக்குள் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும்.

செப்டம்பர் 9 ஆம் திகதிக்கு முன்னர் உறுப்பினர்களால் Brexit சிக்கலுக்கு ஒரு தீர்வை எட்ட முடியவில்லை என்றால் அவர்களுக்கான இறுதி வாய்ப்பு அக்டோபர் 14 ஆம் திகதி என கூறப்படுகிறது.

அதிலும் முடிவை எட்ட முடியவில்லை என்றால் நம்பிக்கை இல்லா பிரேரணை மூலம் ஆட்சியை கவிழ்ப்பது, ஒரு வழியாக பார்க்கப்படுகிறது.

அடுத்த வார துவக்கத்தில் நம்பிக்கை இல்லா பிரேரணை முன்னெடுக்கப்பட்டால், அக்டோபர் 31 ஆம் திகதிக்கு முன்னர் பொதுத் தேர்தலுக்கான சூழல் உருவாகும்.

நம்பிக்கை இல்லா பிரேரணையில் ஜான்சன் அரசு கவிழும் எனில், அனைத்துக் கட்சிகளுக்கும் 2 வார காலம் புதிய அரசை உருவாக்க அவகாசம் உள்ளது.

இந்த இரண்டு வார காலத்தில் புதிய அரசு அமையாமல் போகும் என்றால் பொதுத் தேர்தல் நடைபெறும்.

வாக்களிக்கும் நாளானது அக்டோபர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அல்லது பின்னர் இருக்கும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.

இதே காலகட்டத்தில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும். இருப்பினும் இதில் சட்ட சிக்கல் இதில் இருப்பதாகவும், Brexit நாளானது ஒத்திவைக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் ஜான்சன் அரசு நம்பிக்கை இல்லா பிரேரணையில் வெல்லும் என்றால், தற்போதைய திட்டத்தையே ஜான்சன் அரசு முன்னெடுத்துச் செல்லும்.

இந்த சூழலில் பொதுத் தேரதல் நடைபெற்றால் அதிலும் கன்சர்வேடிவ் கட்சியே ஆட்சியை கைப்பற்றும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்