பர்மிங்காம் தெருவில் படுகொலை செய்யப்பட்ட இளைஞர்: முதன் முறையாக வெளியான புகைப்படம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவின் பர்மிங்காம் பகுதியில் சனிக்கிழமை காலையில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

32 வயதான டேல் க்ரைஸ் பர்மிங்காம் பகுதியில் குடும்பத்துடன் குடியிருந்து வந்துள்ளார். இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான க்ரைஸ், அப்பகுதியில் மிகவும் பிரபலமானவர் எனவும், அனைவருடனும் இணைந்து செயல்பட கூடியவர் என க்ரைஸின் குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இரண்டு பெண் பிள்ளைகளுக்கு தந்தையான க்ரைஸ் தமது மனைவி, தாயார் உள்ளிட்ட மொத்த குடும்பத்தையும் தனியாக தவிக்கவிட்டு சென்றதாக அந்த அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பில் 37 வயதான கட்டுமான தொழிலாளி ரவீந்தர் என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

திங்களன்று இவரை நீதிபதி முன்பு ஒப்படைக்க இருப்பதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

கொலை வழக்கு தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தாலும், மேலதிக தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாரை அணுக வலியுறுத்தியுள்ளனர்.

கொலை சம்பவத்தை நேரில் பார்த்ததாக இரு அண்கள் மற்றும் ஒரு பெண் தொடர்பில் தகவல் வெளியான நிலையில்,

பொலிசார் அவர்களை முன்வந்து சாட்சியம் அளிக்கம் முன்னர் கேட்டுகொண்டுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers