காதலனை சந்திக்க மூன்றரை மணி நேரம் பயணம் செய்த பெண்: காத்திருந்த ஏமாற்றம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

மூன்றரை மணி நேரம் பயணம் செய்து காதலனைக் காணச் சென்ற இளம்பெண், ரயில் நிலையம் சென்று இறங்கியதும், அவரைக் காணவந்த காதலன் கூறிய வார்த்தையால் மனமுடைந்து வீடு திரும்பினார்.

கிட்டத்தட்ட 100 பவுண்டுகள் செலவு செய்து, மூன்றரை மணி நேரம் பயணித்து, காதலனைக் காண Leicesterஇலிருந்து Peterborough சென்று இறங்கினார் Jade Savage (28).

ஆசையுடன் சந்தித்த காதலன், அன்பே ஆருயிரே என காதல் வசனம் பேசுவார் என்று பார்த்தால், அவர் நீ போன முறை இருந்ததை விட ரொம்ப குண்டாகி விட்டாய் என்றார்.

இத்தனைக்கும் நான்கு வாரங்களுக்கு முன்புதான் இருவரும் சந்தித்திருந்தனர்.

வெளிநாடுகளில் ஒருவரது தோற்றத்தைக் குறித்து விமர்சிப்பதை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொள்கிறார்கள்.

அதுவும் ஒருவர் குண்டாக இருக்கிறார் என்று கூறுவதை அவர்களால், அதுவும் இளம்பெண்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.

காதலாகிக் கசிந்து வந்த Jade, இதற்காகவா அவ்வளவு தூரம் பயணித்து, பணம் செலவு செய்து வந்தோம் என்று நொந்து நூடுல்சாகிப்போனார்.

அப்படியும் இருவரும் சேர்ந்து ஒயின் சாப்பிடவாவது செய்யலாம் என்று எண்ணி காதலனின் காரில் ஏறி அவருடன் செல்ல, காரில் வாக்குவாதம் தொடர்ந்திருக்கிறது.

நீங்கள் இப்படி முரட்டுத்தனமாக பேசுகிறீர்களே என்று Jade கேட்க, நீ எனது mood -ஐ மாற்றிவிட்டாய் என்று குற்றம் சாட்டி, மீண்டும் கொண்டு ரயில் நிலையத்திலேயே இறக்கி விட்டு விட்டு சென்றிருக்கிறார் அவரது காதலன்.

மனமுடைந்தாலும் தன்னைத் தேற்றிக் கொண்டு, நீ வராவிட்டால் என்ன, நான் உன்னுடன் ஒயின் சாப்பிட விரும்பினேன், நீ இல்லையென்றால் தனியாக சாப்பிடுவேன் என்று வீம்புக்கு ஒரு ஒயினை வாங்கி ரயில் நிலையத்தில் இருந்தே குடித்துவிட்டு கிளம்பியிருக்கிறார் Jade.

இப்போது, எனது காதலனை சந்திக்கச் சென்று ஏமாந்து விட்டேன், அதற்காக பணமும் செலவளித்துவிட்டேன், யாராவது உதவுங்கள் என்று ஒன்லைனில் உதவி கேட்டிருக்கிறார் Jade. அதற்குள் 45 பவுண்டுகள் சேர்ந்துவிட்டது வேறு விடயம்!

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்