பிரித்தானிய ராணியாருக்கு 100 மில்லியன் பவுண்டுகள் வருவாய் அளித்த விசித்திர பொழுதுபோக்கு

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் விசித்திர பொழுதுபோக்கு ஒன்று அவருக்கு சுமார் 100 மில்லியன் பவுண்டுகள் தொகையை வருவாயாக ஈட்டித்தந்துள்ளது.

தற்போது 93 வயதாகும் பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் இந்த வயதிலும் மிகவும் பரபரப்பாக இயங்கி வருபவர்.

இருப்பினும் தமது ஓய்வு வேளைகளில் பொழுதுபோக்குகளால் அந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ள அவர் தவறியதில்லை.

அவருக்கு குதிரை சவாரி என்றால் கொள்ளை பிரியம், அது போலவே நடை பயிற்சியும். ஆனால் அவரது விசித்திர பொழுதுபோக்கு ஒன்று அவருக்கு மில்லியன் கணக்கில் பவுண்டுகளை அள்ளித் தந்துள்ளது.

குறிப்பிட்டு சொல்லப்போனால் இதுவரை அவருக்கு சுமார் 100 மில்லியன் பவுண்டுகள் வரை வருவாயாக அந்த ஒரே ஒரு பொழுதுபோக்கு ஈட்டித்தந்துள்ளது.

பல ஆண்டுகளாக ராணியார் இரண்டாம் எலிசபெத் உலகெங்கிலும் உள்ள அரிதான அஞ்சல்தலைகளை சேகரித்து வருகிறார்.

அவரது சேகரிப்பில் மிகவும் விலைமதிப்பற்ற அஞ்சல்தலைகளில் ஒன்று Mauritian அஞ்சல்தலை ஆகும்.

இதன் மதிப்பு கடந்த 2002 ஆம் ஆண்டு 2 மில்லியன் பவுண்டுகள் என தகவல் வெளியானது. 1847 ஆம் ஆண்டு வெளியான இந்த அஞ்சல்தலையானது உலகின் மிகவும் மதிப்புமிக்கதில் ஒன்று என கூறப்படுகிறது.

இந்த அஞ்சல்தலையானது 1904 ஆம் ஆண்டு ஏலம் விடப்பட்டப்போது அதன் மதிப்பு அப்போது 1,450 பவுண்டுகள் என கூறப்படுகிறது.

இந்த தொகையானது இன்றைய மதிப்பில் சுமார் 60,000 பவுண்டுகள் என கருதப்படுகிறது. ராணியாருக்கு சுமார் 200 பெட்டிகளில் மொத்தம் 300 ஆல்பங்கள் சொந்தமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்