இலங்கையர்களை பிரித்தானியாவுக்கு கடத்த முயன்ற பிரித்தானிய பெண்: கோவாவில் தூக்கிட்டு தற்கொலை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தங்கள் அடையாளங்களை பயன்படுத்தி நான்கு இலங்கையர்களை பிரித்தானியாவுக்கு கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்ட ஒரு பிரித்தானிய பெண், கோவாவில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தனது 40 வயதுகளிலிருக்கும் லீட்சை சேர்ந்த பிரித்தானியரான Julie Warner, 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் நான்கு இலங்கையர்களை தங்கள் அடையாளத்தை பயன்படுத்தி பிரித்தானியாவுக்கு கடத்த முயன்றதாக மும்பை விமான நிலையத்தில் Captain Fivehats, Stuart Alan Quilliam மற்றும் Dominic Oliver Bower என்பவர்களுடன் கைது செய்யப்பட்டார்.

அவர்களுடன் அருணாசலம் சுதாகரன், கண்ணதாசன் கார்த்தீபன், கஜன் சந்திரபாலன் மற்றும் கவீந்தினி கந்தசாமி என்னும் இலங்கையர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில் கடந்த சனிக்கிழமை, கோவாவில் ஒரு ஆல மரத்தில் ஒரு வெளிநாட்டுப்பெண்ணில் உடல் தொங்குவதைக் கண்ட சிலர் பொலிசாருக்கு தகவலளிக்க, பொலிசார் அவரது படத்தை பத்திரிகைகளில் வெளியிட்டு விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

அப்போதுதான் அவர் பிரித்தானியாவைச் சேர்ந்த Julie Warner என்பது தெரியவந்தது. மார்ச் மாதம் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதும் பல இடங்களில் தங்கியிருக்கிறார்.

காலம் கடந்துகொண்டே செல்ல, வழக்கு முடிவடையாத நிலையில் பிரித்தானியாவுக்கு செல்ல முடியவில்லையே என்ற ஏக்கத்தில் தவித்துள்ளார் அவர். எனவே மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் லீட்சிலிருக்கும் Julie Warnerஇன் மகளான Maisie Wales, தனது தாய் மன நல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்தது உண்மைதான் என தெரிவித்துள்ளதோடு, அவரது உடலை பிரித்தானியாவுக்கு கொண்டுவரும் முயற்சியிலும் இறங்கியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்