என் மனைவிக்கு பல காதலர்கள், அவளை காணவில்லை: மனைவியை கொலை செய்துவிட்டு பொலிசாரை அழைத்த கணவன்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தன் மனைவியை கொலை செய்து அவரது உடலை எங்கோ மறைத்த ஒரு நபர், பொலிசாரை அழைத்து தனது மனைவியை காணவில்லை, அவளுக்கு ஏராளம் ஆண் நண்பர்கள், அதனால் அவளுக்கு என்ன நேர்ந்ததோ தெரியவில்லை என்று தெரிவித்தார்.

பிரித்தானியாவின் Kentஐச் சேர்ந்த Ben Lacomba (39) பொலிசாரை அழைத்து தனது மனைவி சாரா வெல்கிரீன்(46)ஐ காணவில்லை என்று புகார் செய்துள்ளார்.

பொலிசாரை அழைத்த Ben, காணாமல் போன ஒருவரைப் பற்றி புகாரளிக்கவேண்டும், இதற்கு முன் அவள் காணாமல் போனதில்லை, ஆனால் அவள் கொஞ்சம் மோசமான வாழ்க்கை வாழ்பவள் என்பதை மனதில் வைத்துக்கொண்டு பேசுவோம் என்று கூறியிருக்கிறார்.

அவள் என் வீட்டில் வாழ்கிறாள், அவள் என் பிள்ளைகளின் அம்மாதான், ஆனால் நாங்கள் சேர்ந்து வாழவில்லை என்று கூறியுள்ள Ben, அவளது கார் வெளியில்தான் நிற்கிறது, ஆனால் அவளைக் காணவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Ben Lacomba (39)

ஆனால் பொலிசார், Benதான் சாராவைக் கொலை செய்திருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள்.

என்றாலும் Ben வீட்டில் தங்கியிருக்கும் சாராவுக்கு Neil James என்றொரு காதலர் இருக்கிறார்.

பொலிசாரிடம் பேசிய Benஇன் உரையாடல் நீதிமன்றத்தில் ஒலிக்கச் செய்யப்பட்டபோது, சாராவுக்கு பல காதலர்கள் இருக்கிறார்கள் என்று கூறிய Benஇன் வாக்குமூலத்துடன், சாரா, Neil Jamesக்கும் துரோகம் செய்வதாக தெரிவித்ததையும் நீதிபதிகள் கேட்டார்கள்.

Sarah Wellgreen, (46) image: PA:Press Association

என்றாலும் விசாரணை அதிகாரிகள், Benதான் சாராவை கொலை செய்து அவரது உடலை எங்கோ மறைத்துவிட்டதாக கருதுகிறார்கள்.

சாராவால் தனது வீட்டையும் இழந்து, பிள்ளைகளையும் சந்திக்க சாரா தடையாக இருப்பதாலேயே Ben அவரை கொன்றதாக அதிகாரிகள் கருதுகிறார்கள்.

இதுவரை சாராவின் உடல் கிடைக்காத நிலையில், தான் சாராவை கொலை செய்யவில்லை என Ben மறுத்து வருகிறார், விசாரணை தொடர்கிறது.

Sarah Wellgreen and Neil James :- image: Social Media - Refer to Source

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்